ஹிருணிக்கா பிரேமச்சந்திரவிற்கு பிணை
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUL
22

ஹிருணிக்கா பிரேமச்சந்திரவிற்கு பிணை

ஹிருணிக்கா பிரேமச்சந்திரவிற்கு பிணை

மூன்று ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று(22) பிணை வழங்கப்பட்டுள்ளது. 

 

இந்த பிணை கோரிக்கை மனு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

 

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவிற்குட்பட்டு ஹிருணிக்கா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்க நீதிபதி இன்று உத்தரவிட்டுள்ளார். 

 

50,000 ரூபா பெறுமதியான ரொக்கப்பிணையிலும் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்வதற்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

 

அத்துடன், அவருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட காலப்பகுதியில் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவின் பிரத்தியேக பாதுகாவலர்கள் சிலரால் 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி அவருக்கு சொந்தமான டிபென்டரில் அமில பியங்க அமரசிங்க எனும் இளைஞரை கடத்திச்சென்று தாக்குதல் நடத்தி காயப்படுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. 

 

ஹிருணிக்கா பிரேமச்சந்திரவிற்கு எதிராக சட்ட மாஅதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் 18 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியென தீர்மானித்த கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி 33 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்ததுடன் அந்த சிறைத்தண்டனையை ஒரே தடவையில் 3 வருடங்களாக்கி உத்தரவிட்டிருந்தார். 

 

கடந்த ஜூன் 28ஆம் திகதி இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

views

178 Views

Comments

arrow-up