மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டி கட்டணம் குறைப்பு

மேல் மாகாணத்தில் இன்று(15) நள்ளிரவு முதல் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இரண்டாவது கிலோமீட்டருக்காக அறவிடப்படும் கட்டணம் 10 ரூபாவினால் குறைக்கப்படும் என அதன் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, மேல் மாகாணத்திற்குள் முதலாவது கிலோமீட்டருக்கான கட்டணம் 100 ரூபா எனவும் இரண்டாவது கிலோமீட்டர் முதல் 90 ரூபா அறவிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
188 Views
Comments