மூதூர் - கிளிவெட்டியில் பெண் கொலை - பிரதான சந்தேகநபர் கைது

மூதூர் - கிளிவெட்டியில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 5ஆம் திகதி சேருநுவர - தங்கபுரத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பெண்ணொருவரின் சடலம் கிளிவெட்டியில் பாவனையற்ற கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான 25 வயதுடைய மூதூர் பகுதியை சேர்ந்த இளைஞர் நேற்று(07) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை 48 மணித்தியாலங்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
205 Views
Comments