மடு அன்னையின் திருவுருவம் பொறிக்கப்பட்ட முத்திரை வௌியீடு

மன்னார் மடு அன்னையின் ஆடிமாதத் திருவிழா நாளை(02) கொண்டாடப்படவுள்ளது.
இந்நிலையில், மடு அன்னை அரசியாக முடிசூட்டப்பட்டதன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடு அன்னையின் திருவுருவம் பொறிக்கப்பட்ட முத்திரை இன்று(01) வௌியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை அன்ரனி ஞானப்பிரகாசத்தின் ஏற்பாட்டில் இன்று(01) முற்பகல் இந்த நிகழ்வு நடைபெற்றது.
தபால்மா அதிபர் ருவன் சத்குமாரவினால் விசேட முத்திரை மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையிடம் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் தபால் திணைக்கள அதிகாரிகள், கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சத்துரி பிந்து மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
216 Views
Comments