கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் 65 மணித்தியால நீர் விநியோகத் தடை

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர்த்தேக்கத்திலுள்ள நீர் எதிர்வரும் 28ஆம் திகதி முழுமையாக வெளியேற்றப்படவுள்ளது.
குறித்த நீர்த்தேக்கத்தை 3 நாட்களுக்கு வெறுமையாக வைத்திருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொல்கொல்ல மகாவலி நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க, 28ஆம் திகதி அதிகாலை 1 மணி முதல் 30ஆம் திகதி மாலை 6 மணி வரை 65 மணித்தியாலங்களுக்கு நீர்த்தேக்கம் வெறுமையாக வைக்கப்படவுள்ளது.
நீரை அகற்றும் காலப்பகுதியில் பொல்கொல்ல மகாவலி ஆற்றுக்கு மேல் மற்றும் கீழ் பகுதிகளை அண்மித்து வாழும் மக்கள், மகாவலி ஆற்றைப் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பொல்கொல்ல நீர்த்தேக்கத்திலுள்ள நீர் அகற்றப்படும் சந்தர்ப்பத்தில் கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.
இதற்கிணங்க, கண்டி நகர சபைக்குட்பட்ட பகுதிகள், ஹரிஸ்பத்துவ, பூஜாபிட்டிய, பஹத்த தும்பர மற்றும் அக்குரணை ஆகிய பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
குண்டசாலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ரஜவெல்ல, சிறிமல்வத்த, அம்பிட்டிய, அமுனுகம, ஹந்தான மற்றும் வலல பிரதேசங்களிலும் Greater Kandy நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நீர் விநியோகிக்கப்படும் மாவத்தகம பிரதேசத்திலும் நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கூறியுள்ளது.
139 Views
Comments