SEP
19
கிளிநொச்சி வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி - வட்டக்கச்சி பகுதியில் இன்று(19) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சியிலிருந்து வட்டக்கச்சி நோக்கி பயணித்த டிப்பர் வாகனமொன்று பாதசாரி மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
136 Views
Comments