நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் காற்றின் தரம் வீழ்ச்சி

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் காற்றின் தரம் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்தியாவில் இருந்து வரும் மாசு நிறைந்த வளியினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்தார்.
இதன் காரணமாக சுவாச நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டுமென தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.
65 Views
Comments