இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள மாணவர் இலவச காலணி திட்டம்

பாடசாலை மாணவர்களுக்கான காலணிகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை விநியோகிக்கும் நடவடிக்கை எதிர்வரும் 05 ஆம் திகதியுடன் நிறைவடையுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கே காலணிகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த பாடசாலைகளின் மாணவர்களுக்காக வவுச்சர்களை விநியோகிக்கும் நடவடிக்கை தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்படாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்காக அப்பியாச கொப்பிகளையும் கற்றல் உபகரணங்களையும் கொள்வனவு செய்வதற்காக 6000 ரூபா கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கையையும் எதிர்வரும் 05 ஆம் திகதியுடன் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தினூடாக சுமார் 5 இலட்சம் மாணவர்கள் பயனடைகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
58 Views
Comments