3 மாதங்களாக மஹபொல புலமைப்பரிசில் கிடைக்கவில்லை - அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
FEB
03

3 மாதங்களாக மஹபொல புலமைப்பரிசில் கிடைக்கவில்லை - அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய

3 மாதங்களாக மஹபொல புலமைப்பரிசில் கிடைக்கவில்லை - அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய

03 மாதங்களாக மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு கிடைக்கவில்லையென அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவிக்கின்றனர்.

 

சில பல்கலைகழங்களில் 3 மாதங்களுக்கு மேல் மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கப்படவில்லை எனவும் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மதுஷான் சந்தரஜித் தெரிவித்துள்ளார்.

 

இந்த விடயம் தொடர்பாக உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவவிடம் நாம் வினவினோம்.

 

கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

 

சுமார் ஒரு வருடகாலமாக கொடுப்பனவில் தாமதம் ஏற்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

 

எவ்வாறாயினும், தற்போது இந்த தாமதத்தை 3 மாதங்களாக குறைத்துள்ளதாக உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்தார்.

 

எதிர்வரும் காலங்களில் இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்து வழமைபோன்று மாதாந்தம் மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் உறுதியளித்தார்.

views

51 Views

Comments

arrow-up