பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட அச்சுப் பணிகள் ஆரம்பம் - அரச அச்சகம்

பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட அச்சுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.
வர்த்தமானி, விண்ணப்பப் படிவங்கள் மற்றும் ஏனைய அடிப்படை ஆவணங்களை அச்சிடும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்தார்.
அச்சுப் பணிகளுக்காக செலவாகும் பணம் இதுவரையில் மதிப்பிடப்படவில்லை.
எவ்வாறாயினும், பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதிக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் அனைத்து அச்சுப் பணிகளும் நிறைவடையும் என அரச அச்சகர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய வாக்குச்சீட்டுகள், உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் உள்ளிட்ட ஏனைய அச்சுப்பணி நடவடிக்கை வேட்புமனு தாக்கலுக்கு பின்னர் ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
207 Views
Comments