நேபாள விமான விபத்தில் 18 பேர் உயிரிழப்பு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUL
24

நேபாள விமான விபத்தில் 18 பேர் உயிரிழப்பு

நேபாள விமான விபத்தில் 18 பேர் உயிரிழப்பு

நேபாளத்தின் தலைநகரம் காத்மண்டுவில் விமானம் விபத்திற்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். 

 

Tribhuvan சர்வதேச விமான நிலையத்தில் பயணத்தை ஆரம்பித்து சில நிமிடங்களில் விமான ஓடுபாதையிலேயே விபத்து நேர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

 

இன்று(24) முற்பகல் 11 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளதுடன், அந்த சந்தர்ப்பத்தில் விமானத்தில் 19 பேர் பயணித்துள்ளனர். 

 

விபத்தை அடுத்து விமானம் தீப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எவ்வாறாயினும், விமானி மாத்திரம் உயிர் தப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

 

நேபாளத்தில் கடந்த ஆண்டு ஜனவரியில் இடம்பெற்ற விமான விபத்தில் 72 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1992ஆம் ஆண்டில் பாகிஸ்தான் விமானமொன்று காத்மண்டுவை அண்மித்து விபத்திற்குள்ளானதில் 167 பேர் உயிரிழந்தனர்.

views

199 Views

Comments

arrow-up