OCT
01
குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் பாலிவுட்டில் அறிமுகமாகிறார்...

உலகின் மிகச்சிறந்த குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் விரைவில் இந்தியாவில் திரையிடப்பட இருக்கும் ஒரு படத்தில் இணைந்து பாலிவுட் சினிமாவை ஆக்கிரமிக்கத் தயாராகி வருகிறார்.
54 வயதான குத்துச்சண்டை சாம்பியன் லிகர் (Ligar) படத்தில் அறிமுகமாகிறார்.
திரைப்படத் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தனது ட்விட்டர் கணக்கில் குத்துச்சண்டை சாம்பியனின் வருகையைப் பற்றி ஒரு குறிப்பை வெளியிட்டு இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த படத்தில் இந்திய நடிகர்கள் விஜய் தேவர்கொண்டா மற்றும் அனன்யா பாண்டே ஆகியோர் நடிக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
718 Views
Comments