ஷாருக்கானின் மகன் இந்திய போதைப்பொருள் துறையால் கைது செய்யப்பட்டார்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் 23 வயதான மகன் ஆர்யன் கான், இந்திய போதைப்பொருள் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மும்பை கடலில் கப்பலில் விருந்தில் கலந்து கொண்டபோது போதைப்பொருளைப் பயன்படுத்தி இந்திய போதைப்பொருள் பணியகத்தால் ஆரியன் கான் கைது செய்யப்பட்டார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, மும்பையிலிருந்து கோவா செல்லும் கப்பலில் ஒரு குழு போதைப்பொருளைப் பயன்படுத்துவதாக இந்திய போதைப்பொருள் பணியகத்திற்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, பணியகத்தின் அதிகாரிகள் மாறுவேடத்தில் கப்பலுக்குள் நுழைந்தனர். விருந்தில் பங்கேற்ற நபர்கள் கப்பல் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே போதைப்பொருளைப் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
கப்பலில் இருந்து கொகேயின் உள்ளிட்ட போதைப்பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
714 Views
Comments