திருமணத்திற்கு தயாரான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்

தென்னிந்திய படங்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாராவுக்கு 2015 ஆம் ஆண்டில், நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது, இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் மலர்ந்தது.
சுமார் 6 ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வதாக கூறப்படுகிறது. நடிகை நயன்தாராவின் குடும்ப உறுப்பினர் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதாகவும், குடும்பத்தினர் அவரை உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தி வருவதாகவும், அவர்களின் கட்டாயத்தின் காரணமாக நயன்தாரா திருமணத்திற்கு ஒப்புக் கொண்டதாகவும் மலையாள ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனால், அடுத்த சில மாதங்களில் திருமணம் நடைபெறும் என நம்பப்படுகிறது. நடிகை நயன்தாராவுக்கு அண்ணாத்த, நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்கள் கைவசம் உள்ளன. மேலும் இவர் திரைப்படத் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
702 Views
Comments