யூரோ கால்பந்து போட்டி தூரத்தையும் அடைந்த வலிமை!

யூரோ கால்பந்து விளையாட்டில் வலிமை பட அப்டேட் கோரி ரசிகர்கள் பதாகை ஏந்திய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப்பின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் டென்மார்க்கும் இங்கிலாந்தும் மோதிக்கொண்டன. நடிகர் அஜித் குமார் நடித்த வலிமை படம் குறித்த அப்டேட் கோரி பதாகை ஒன்று ஏந்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதன் பின்னர் படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக தொடங்கியது. இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான உலகக் கோப்பை டெஸ்ட் தொடர், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா என பல இடங்களில் மறைத்து வைக்கப்பட்டு வந்த வலிமை பட அப்டேட் இப்போது கடல் தாண்டி யூரோ கால்பந்து போட்டி வரை வந்துள்ளது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 15 ஆம் திகதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
669 Views
Comments