NOV
08
குலாப் ஜாமூன்

குலாப் ஜாமூன் என்பது பாலை அடிப்படையாகக்கொண்டு செய்யப்படும் இனிப்பு வகையாகும், இது இந்தியாவில் உருவாக்கப்பட்டதுடன் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், மாலைத்தீவுகள், பங்களாதேஷ் மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில் பிரபலமான இனிப்பு வகையாகும். இது பாகிஸ்தான் அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக பாகிஸ்தானின் தேசிய இனிப்பு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு கிட்ஸ் ஃபுட் மூலம் தொடங்கப்பட்ட உலக குலாப் ஜாமூன் தினம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 10 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.
தேவையான பொருட்கள்:
கோதுமை மா |
500 கிராம் |
டின் பால் |
½ டின் |
சீனி |
250 கிராம் |
நெய் |
2 தேக்கரண்டி |
அப்பச்சோடா |
½ தேக்கரண்டி |
வனிலா |
1 தேக்கரண்டி |
தேங்காய் எண்ணெய் |
½ போத்தல் |
உப்பு |
அளவாக |
செய்முறை:
- மாவுடன் அப்பச்சோடா, உப்பு, நெய், வனிலா இவற்றைச் சேர்த்து டின் பாலை விட்டு நன்கு பிசைந்து மூடி வைக்கவும்.
- ஒரு மணித்தியாலத்தில் பின், திரும்பவும் பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டவும்.
- பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- சீனியைப் பாகுகாய்ச்சி அப்பாகினுள் பொரித்த உருண்டைகளைப் போட்டு எடுத்துப் பரிமாறவும்
சுவையான குலாப் ஜாமூன் தயார்...
784 Views
Comments