கடலை மா லட்டு

லட்டு இந்திய துணைக் கண்டத்தில் இருந்து உருவான ஒரு கோள இனிப்பு ஆகும். லட்டுகள் முதன்மையாக மாவு, கொழுப்பு (நெய்/வெண்ணெய்/எண்ணெய்) மற்றும் சர்க்கரை ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. லட்டு பெரும்பாலும் கடலை மாவில் தயாரிக்கப்படுகிறது ஆனால் ரவையுடன் கூட செய்யலாம்.சில நேரங்களில் நறுக்கப்பட்ட பருப்பு வகைகள் (முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு. மேலும்) மற்றும் முந்திரி வற்றல் போன்ற பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. பயன்படுத்தப்படும் பொருட்களின் வகை செய்முறையைப் பொறுத்து மாறுபடலாம்.
இவை பெரும்பாலும் பண்டிகை அல்லது மத நிகழ்வுகளின் போது பரிமாறப்படுகின்றன.
தேவையான பொருட்கள்:
கடலை மா |
1 சுண்டு |
அப்பச்சோடா |
1 தேக்கரண்டி |
சீனி |
250 கிராம் |
நெய் |
100 கிராம் |
தண்ணீர் |
2 கப் |
கற்கண்டு தூள் |
2 மேசைக்கரண்டி |
முந்திரிப் பருப்பு |
25 கிராம் |
முந்திரி வற்றல் |
25 கிராம் |
ஏலப்பொடி |
2 தேக்கரண்டி |
உப்பு |
அளவாக |
தேங்காய் எண்ணெய் |
½ போத்தல் |
செய்முறை:
- மாவுடன் அப்பச்சோடா, கேசரி பவுடர், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கரைத்து அரை மணி நேரம் வைத்திருக்கவும்.
- நன்றாக கொதித்த எண்ணெயின் மேல் துவாரம் உள்ள கரண்டியை பிடித்து அதன் மேல் மாவை வார்த்துக்கொள்ளவும்.
- பூந்தி ஓரளவு பொரிந்ததும் எடுத்து எண்ணெயை வடிய விடவும்.
- பின் உரலில் இட்டு மெதுவாக இடித்த சீனியை இடையிடையே சேர்த்து இடித்து எடுத்துக்கொண்டு கற்கண்டு, நெய்யில் பொரித்த முந்திரிப் பருப்பு, வற்றல், வாசனைப் பொருட்களையும் சேர்க்கவும்.
- நெய்யைச் சூடாக்கி சிறிது சிறிதாக விட்டு கலந்து சூட்டுடன் உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.
சுவையான கடலை மா லட்டு தயார்...
844 Views
Comments