வாழைச்சேனையில் ஒருவர் கொலை ; 2 இளைஞர்கள் கைது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
FEB
06

வாழைச்சேனையில் ஒருவர் கொலை ; 2 இளைஞர்கள் கைது

வாழைச்சேனையில் ஒருவர் கொலை ; 2 இளைஞர்கள் கைது

மட்டக்களப்பு - வாழைச்சேனை, ஓமனியாமடு பகுதியில்  ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

உறவுமுறை சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்று ஒருவருக்கொருவர் பொல்லால் தாக்கிக்கொண்ட சம்பவம் நேற்று(05) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

 

இதன்போது இருவரையும் சமரசப்படுத்துவதற்காக சென்றவரின் தலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

தாக்குதலில் பலத்த காயமடைந்த 63 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

சம்பவம் தொடர்பில் ஓமனியாமடு மற்றும் மஹுருமுனை பகுதிகளைச் சேர்ந்த 19, 26 வயதான 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

views

50 Views

Comments

arrow-up