மும்பை படகு விபத்தில் 13 பேர் உயிரிழப்பு

மும்பை கடற்கரை பகுதியில் சுற்றுலா படகு மீது கடற்படையின் அதிவேக ரோந்து படகு மோதியதில் ஆகக்குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களில் 3 கடற்படை வீரர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான Elephanta குகையை நோக்கி நேற்று(18) மாலை பயணித்த படகில் சென்றவர்களே இவ்வாறு அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளனர்.
இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
75 Views
Comments