சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 44 பேர் உயிரிழப்பு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
30

சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 44 பேர் உயிரிழப்பு

சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 44 பேர் உயிரிழப்பு

சிரியாவில் இஸ்ரேல் நேற்று (29) நடத்திய வான்வழித் தாக்குதலில் 44 பேர் உயிரிழந்துள்ளனா். 

 

சிரியாவின் வடக்கு நகரமான அலெப்போவில் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினரை இலக்கு வைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. 

 

அலெப்போ சா்வதேச விமான நிலையத்திற்கு அருகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டதில் 44 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர். 

 

அவா்களில் 36 போ் சிரியா இராணுவத்தினா் எனவும் 7 போ் ஹிஸ்புல்லா படையினா் எனவும் ஒருவா் மற்றோா் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவைச் சோ்ந்தவா் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

1967-ஆம் ஆண்டு நடைபெற்ற ‘6 நாள்’ போரின் போது சிரியாவின் கொலான் குன்றுகள் பிரதேசத்தின் ஒரு பகுதியைக் கைப்பற்றிய இஸ்ரேல், அதனை தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொண்டது. எனினும், இந்த நடவடிக்கையை சா்வதேச நாடுகள் அங்கீகரிக்கவில்லை.

 

இந்த விவகாரத்தில் சிரியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தொடா்ந்து பகை நிலவி வருகிறது. 

 

இந்தச் சூழலில், இஸ்ரேலை உலக வரைபடத்திலிருந்து அழிப்பதாக உறுதி பூண்டுள்ள ஈரானுடன் சிரியா நல்லுறவைப் பேணி வருகிறது. அந்த நாட்டின் ஆதரவுடன் செயற்படும் பல்வேறு ஆயுதக் குழுக்களுக்கு சிரியா தங்களது நாட்டில் இடமளித்துள்ளது. 

 

இதில், இஸ்ரேலின் இன்னொரு அண்டை நாடான லிபியாவில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் அடங்குவா்.

 

இந்த நிலையில், ஈரான் ஆதரவு பெற்ற மற்றொரு ஆயுதப் படையான ஹமாஸைச் சோ்ந்தவா்கள் கடந்த ஒக்டோபர் 7-ஆம் திகதி இஸ்ரேலுக்குள் நுழைந்து 1,200-க்கும் மேற்பட்டவா்களை படுகொலை செய்தனா். அதையடுத்து, ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதாக சூளுரைத்த இஸ்ரேல், அவா்கள் ஆட்சி செலுத்திவந்த காஸா பகுதியில் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனா்.  

 

இந்த போரில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ஹமாசுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

 

இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. 

 

மறுபுறம், வடக்கு எல்லையில் அமைந்துள்ள சிரியாவில் ஈரான் இராணுவ ரீதியில் செல்வாக்கு பெறக் கூடாது என்று இஸ்ரேல் தொடா்ந்து கூறிவருகிறது. 

 

இதன் காரணமாக, சிரியா எல்லைக்குள் ஈரான் ஆதரவுப் படையினா் மீது  இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. 

views

27 Views

Comments

arrow-up