Voice of America ஊடக வலையமைப்பை மூடுவதற்கான நிறைவேற்று உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி கையொப்பம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
18

Voice of America ஊடக வலையமைப்பை மூடுவதற்கான நிறைவேற்று உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி கையொப்பம்

Voice of America ஊடக வலையமைப்பை மூடுவதற்கான நிறைவேற்று உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி கையொப்பம்

Voice of America ஊடக வலையமைப்பை மூடுவதற்கான நிறைவேற்று உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைச்சாத்திட்டுள்ளார்.

 

ட்ரம்புக்கு எதிரான வெறுப்பு கொள்கையை இந்த நிறுவனம் பின்பற்றுவதாக குற்றஞ்சாட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

இரண்டாம் உலகப்போரின் போது நாஸி மற்றும் ஜப்பானின் பிரச்சாரங்களை எதிர்கொள்ளும் ஒலிபரப்பு வலையமைப்பாக 1942ஆம் ஆண்டு Voice of America ஊடக வலையமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.

 

தற்போது உலகளாவிய ரீதியில் 48 மொழிகளில் வானொலி, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உள்ளிட்ட அனைத்து மின்னணு ஊடக வலையமைப்பிலும் வியாபித்துள்ளது.

 

Voice of America ஊடக வலையமைப்பை அரச ஊடக வலையமைப்பாக அங்கீகரிக்கும் நிறைவேற்று உத்தரவு 1976ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியால் கைச்சாத்திடப்பட்டது.

 

அதன்பின்னர் அமெரிக்க அரசாங்கமே அதற்கான செலவுகளைப் பொறுப்பேற்றிருந்தது.

 

இந்த நிலையில் Voice of America ஊடக வலையமைப்பை மூடுவதற்கான நிறைவேற்று உத்தரவில் டொனால்ட் ட்ரம்ப் கைச்சாத்திட்டுள்ளமையால் அதில் பணிபுரிந்த 1300 பேர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளனர்.

 

இது ஊடக சுதந்திரத்தின் மீதான பாரிய தாக்குதலாகும் என சர்வதேச ஊடக அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

views

30 Views

Comments

arrow-up