இலங்கையை வெற்றிகொண்ட இந்தியா

19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்தன.
இலங்கையுடனான இன்றைய போட்டியில் இந்திய மகளிர் அணி 60 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது.
மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 118 ஓட்டங்களை பெற்றது.
ப்ரமுதி மெத்சரா, லிமங்சா திலகரத்ன மற்றும் அசேனி தலகுனே ஆகியோர் தலா 02 விக்கட்டுக்களை கைப்பற்றினர்.
119 எனும் வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை மகளிர் அணியால் 20 ஓவர்களில் 09 விக்கட்டுக்களை இழந்து 58 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.
71 Views
Comments