அரைஇறுதிப் போட்டிக்கான ஆடுகளத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டதா?
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
NOV
15

அரைஇறுதிப் போட்டிக்கான ஆடுகளத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டதா?

அரைஇறுதிப் போட்டிக்கான ஆடுகளத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டதா?

உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முதல் அரைஇறுதிப் போட்டியில் இந்தியாவும் நியூஸிலாந்தும் மோதுகின்றன. 

 

இந்தப் போட்டி நடைபெறும் மும்பை வான்கடே மைதானத்தின் ஆடுகளம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. 

 

இந்தியாவின் கோரிக்கைக்கு அமைவாக சுழல்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக கைகொடுக்கக்கூடிய "Slow pitch - ஆடுகளம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளதாக தற்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

 

மும்பை வான்கடே மைதானத்தில் இதற்கு முன்னர் பயன்படுத்தப்படாத புதிய ஆடுகளத்தை அரைஇறுதிப் போட்டிக்கு அமைத்துக்கொடுக்க திட்டமிடப்பட்டிருந்தது.

 

எனினும், இந்தியாவின் கோரிக்கையினால் ஏற்கனவே 2  ​போட்டிகளுக்கு பயன்படுத்தப்பட்ட "Slow pitch" - என அழைக்கப்படும் மெதுவான ஆடுகளமே மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

"Slow pitch" ஆடுகளத்தில் கிடைக்கக்கூடிய சாதக தன்மைகள் என்ன?

 

இந்திய சுழல்பந்துவீச்சாளர்களுக்கு இந்த ஆடுகளம் கூடுதல் சாதகமாக இருப்பதுடன் நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களுக்கு அது எவ்விதத்திலும் கைகொடுக்காது என்பது சர்வதேசத்தின் வாதமாகும்.

 

சர்வதேச கிரிக்கெட் பேரவை நடத்தும் தொடர்களில் அவர்களுடைய ஆலோசனைகளுக்கு அமைவாகவே ஆடுகளம் அமைக்கப்படும். 

 

ஆனாலும், இந்த சந்தர்ப்பத்தில் அந்த நிலை மாறி இந்தியாவின் கோரிக்கைக்கு அமைவாக ஆடுகளம் அமைக்கும் பணி இடம்பெற்றுள்ளதென்பதே சர்வதேசத்தின் குற்றச்சாட்டு. 

 

இந்திய அணி "Slow pitch"  ஆடுகளத்தை கோரியிருந்ததாகவும் அதற்கமைய ஆடுகளத்தில் புற்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டதாகவும் மும்பை கிரிக்கெட் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் சர்வதேச ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

views

78 Views

Comments

arrow-up