தசுன் சானக்கவிற்கு 10,000 டொலர் அபராதம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
FEB
20

தசுன் சானக்கவிற்கு 10,000 டொலர் அபராதம்

தசுன் சானக்கவிற்கு 10,000 டொலர் அபராதம்

விளையாட்டு ஒப்பந்தம் தொடர்பான விதிமுறைகளை மீறியமையால் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் தசுன் சானக்கவிற்கு இலங்கை கிரிக்கெட்டினால் 10,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு தசுன் சானக்க, இலங்கை கிரிக்கெட்டினால் நடத்தப்படும் கழகங்களுக்கு இடையிலான 3 நாள் போட்டித்தொடரின் போட்டியொன்றை நிராகரித்துள்ளார்.

 

இதற்கான மருத்துவ சான்றிதழை சமர்ப்பித்த தசுன் சானக்க, அன்றைய தினமே துபாய்க்கு பயணித்து அங்கு நடைபெறும் துபாய் சர்வசேத லீக் கிரிக்கெட் தொடரிரல் பங்கேற்றுள்ளார்.

 

இதனுாடாக இலங்கை கிரிக்கெட்டிற்கும் தசுன் சானக்கவிற்கும் இடையிலான விளையாட்டு ஒப்பந்தம் தொடர்பான விதிமுறைகளை மீறப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

 

இந்த விடயம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது தசுன் சானக்க கவலை வௌியிட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

views

47 Views

Comments

arrow-up