கண்டி அணி கழகங்களுக்கு இடையிலான லீக் ரக்பி கிண்ணத்தை தன்வசப்படுத்தியது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
16

கண்டி அணி கழகங்களுக்கு இடையிலான லீக் ரக்பி கிண்ணத்தை தன்வசப்படுத்தியது

கண்டி அணி கழகங்களுக்கு இடையிலான லீக் ரக்பி கிண்ணத்தை தன்வசப்படுத்தியது

கண்டி அணி கழகங்களுக்கு இடையிலான லீக் ரக்பி கிண்ணத்தை இம்முறை மீண்டும் வெற்றி கொண்டது.

இறுதிப் போட்டியில் ஹெவ்லொக் அணியை தோற்கடித்து கண்டி அணி கிண்ணத்தை தன்வசப்படுத்தியது.

நித்தவெலவில் இந்த இறுதிப் போட்டி நடைபெற்றது. 

போட்டியின் முதல் பாதியில் 31 க்கு 10 என்ற புள்ளிகள் கணக்கில் கண்டி அணி முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் கண்டி அணி மேலும் 19 புள்ளிகளை பெற்றது.

ஹெவ்லொக் அணியால் 14 புள்ளிகளை மாத்திரமே பெற முடிந்தது.

அதற்கமைய கண்டி அணி 50 க்கு 24 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்தது.

இம்முறை கழகங்களுக்கு இடையிலான லீக் ரக்பி தொடரில் 65 புள்ளிகளைப் பெற்று கண்டி அணி முன்னிலை பெற்றிருந்தது.

கண்டி அணி இந்த கிண்ணத்தை சுவீகரித்த 24ஆவது சந்தர்ப்பம் இதுவாகும்.

கண்டி அணியின் பிரபல வீரரான நைஜல் ரத்வத்தே இன்றைய வெற்றியுடன் தனது ஓய்வை அறிவித்தார்.

views

31 Views

Comments

arrow-up