பொதுநிர்வாக மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சினால் வௌியிடப்பட்ட சுற்றுநிருபம்

அரச ஊழியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை வழங்கமுடியாத நிறுவனங்களுக்கு சம்பளத்தின் நிலுவைப்பணத்தை வழங்குவதற்காக பிறிதொரு திகதியை அறிவித்து சுற்றுநிருபம் வௌியிடப்பட்டுள்ளது.
பொதுநிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆலோக பண்டாரவினால் இந்த சுற்றுநிருபம் வௌியிடப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட சம்பளம் இன்று வழங்கப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்தின் அடிப்படையில் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை இன்று வழங்க இயலாத நிறுவனங்கள் அரச உத்தியோகத்தர்களுக்கு தற்போதுள்ள சம்பளத்தை செலுத்த வேண்டும்.
புதிய சம்பள திருத்தத்திற்கமைய நிலுவைத்தொகையை எதிர்வரும் 25ஆம் திகதி செலுத்த வேண்டும்.
இதேவேளை 2020ஆம் ஆண்டிற்கு முன்னர் ஓய்வுபெற்ற ஓய்வூதியதார்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளம் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வழங்கப்படும் என பொதுநிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
2020 மற்றும் 2024ஆம் ஆண்டுகாலப் பகுதியில் ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த வருடம் முதலே சம்பளம் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
14 Views
Comments