யால தேசிய வனவிலங்கு பூங்கா தொடர்பில் புதிய தீர்மானம்

யால தேசிய வனவிலங்கு பூங்காவில் மேலும் சில வலயங்களை சுற்றுலாப் பயணிகளுக்காக திறப்பதற்கு சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் நெரிசலைக் கையாள்வதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தம்மிக்க படபெந்தி தெரிவித்தார்.
அரன்கமுவ எனும் பெயரில் புதிய வலயமொன்றும் தற்போது மூடப்பட்டுள்ள 3 ஆம், 4 ஆம் வலயங்களையும் உடனடியாக திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
குறித்த பகுதிகளில் சலுகைகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
100,000 ஹெக்டேயர் பரப்பளவு கொண்ட யால தேசிய பூங்காவில் 25,000 ஹெக்டேயர் பகுதி மாத்திரமே சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது.
299 Views
Comments