தேசிய வெசாக் வாரம் இன்று முதல்..
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAY
10

தேசிய வெசாக் வாரம் இன்று முதல்..

தேசிய வெசாக் வாரம் இன்று முதல்..

தேசிய வெசாக் வாரம் இன்று(10) ஆரம்பமாகின்றது

“நல்ல குணங்களைக் கொண்ட உன்னத மக்களுடன் பழகுவோம்” எனும் தொனிப்பொருளில் இந்த ஆண்டு தேசிய வெசாக் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.

 

எதிர்வரும் மே 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

 

இதன் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நுவரெலியா பௌத்த நிலைய விகாரையில் இன்று(10) மாலை  நடைபெறவுள்ளது.

 

நுவரெலியாவில் நடைபெறும் தேசிய வெசாக் பண்டிகை மற்றும் அனுராதபுரத்திற்கு செல்லும் பக்தர்களுக்காக விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.

 

எதிர்வரும் 13ஆம் திகதி வரை இந்த விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

 

வெசாக் வாரத்தை முன்னிட்டு எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை 3 நாட்களுக்கு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து இறைச்சி மற்றும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படவுள்ளன.

views

112 Views

Comments

arrow-up