தேஷபந்து தென்னகோனுக்கு வௌிநாட்டு பயணத்தடை

முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனுக்கு வௌிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இவ்வாறு வௌிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
2003ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி மாத்தறை - பெலேன பகுதியிலுள்ள ஹோட்டலொன்றுக்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய அவரை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம்(28) உத்தரவிட்டது.
முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி என்ஸ்லம் டி சில்வா உள்ளிட்ட 6 சந்தேகநபர்களை கைது செய்வதற்கு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டிருந்தது.
கொலைக்காக சதி செய்த குற்றச்சாட்டின் கீழ் அவர்களைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
33 Views
Comments