ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் இன்று
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAY
16

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் இன்று

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் இன்று

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 26 சொகுசு வாகனங்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன.

 

ஏலத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கையாக சொகுசு வாகனங்கள் மற்றும் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட வாகனங்கள் இவ்வாறு ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளன.

 

இந்த வாகனங்கள் அனைத்தும் 10 வருட காலத்திற்குள் தயாரிக்கப்பட்டவையாகும்.

 

அரச செலவை குறைக்கும் நோக்கில் இவற்றை ஏலத்தில் விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

இந்த வாகனங்கள் முன்னாள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆலோசகர்கள் மற்றும் நிர்வாகத்தினர் பயன்படுத்தியவை என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

views

153 Views

Comments

arrow-up