குறுந்தகவல் ஊடான மோசடிகளில் சிக்க வேண்டாம் - தபால் திணைக்களம் அறிவுறுத்தல்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
17

குறுந்தகவல் ஊடான மோசடிகளில் சிக்க வேண்டாம் - தபால் திணைக்களம் அறிவுறுத்தல்

குறுந்தகவல் ஊடான மோசடிகளில் சிக்க வேண்டாம் - தபால் திணைக்களம் அறிவுறுத்தல்

உள்நாட்டில் அல்லது வௌிநாட்டில் இருந்து பொதிகள் கிடைத்துள்ளதாக தெரிவித்து குறுந்தகவல் ஊடாக  வாடிக்கையாளர்களின் கடனட்டை தொடர்பான தகவல்களை பெறும் மோசடி குறித்து அவதானமான இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 

இவ்வாறான மோசடி சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 

போலி இணையத்தளம், போலி தொலைபேசி இலக்கங்கள் மூலம் இந்த மோசடி இடம்பெறுவதாக தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

 

தபால் திணைக்களத்தினை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் இவ்வான மோசடிகளில் சிக்க வேண்டாம் என திணைக்களம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

 

தபால் திணைக்களமானது, கடன் அட்டைகள் தொடர்பில் குறுஞ்செய்திகள் மூலமாகவோ அல்லது வேறு எந்த வகையிலும் தகவல்களை பெற்றுக்கொள்வதில்லை என தபால்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார். 

views

14 Views

Comments

arrow-up