வைத்தியசாலைகளில் கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்கு பற்றாக்குறை
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
DEC
26

வைத்தியசாலைகளில் கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்கு பற்றாக்குறை

வைத்தியசாலைகளில் கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்கு பற்றாக்குறை

நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்கு பற்றாக்குறை காணப்படுவதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

40 வீதத்திற்கும் அதிகமான அதிகாரிகளுக்கான பற்றாக்குறை காணப்படுவதாக அதன் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.

 

கடந்த அரசாங்கத்தால் அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களை சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டமையால் இந்த நிலைமை ஏற்பட்டதாக அவர் கூறினார்.

 

இதன் காரணமாக நோயாளர்களின் சிகிச்சை மற்றும் பரிசோதனை நடவடிக்கைள் தாமதமடைந்துள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

 

இந்த ஆண்டில் 80-இற்கும் அதிகமான கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் நாட்டை விட்டு வௌியேறியுள்ளதுடன் 41 உயர் டிப்ளோமாதாரிகள் தற்போது தொழில்வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பதாக அவர் கூறினார்.

 

தற்போது 620 கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சேவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

views

88 Views

Comments

arrow-up