பாடசாலை தவணை பரீட்சை வினாத்தாளில் அரசியல் கட்சியுடன் தொடர்புடைய வினாக்கள் ; விசாரணை நடத்துமாறு கல்வி அமைச்சு

பாடசாலை தவணைப் பரீட்சை வினாத்தாளில் அரசியல் கட்சியொன்றுடன் தொடர்புடைய 05 வினாக்கள் உள்ளடக்கப்பட்டமை தொடர்பில் விரைவில் விசாரணை நடத்துமாறு கல்வி அமைச்சின் செயலாளர் துறைசார் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
களுத்துறை மாவட்டத்திலுள்ள பாடசாலையொன்றில் இரண்டாம் தவணைப் பரீட்சையின் போது உயர்தர மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பொது அறிவு வினாத்தாளில் அரசியல் கட்சியொன்றுடன் தொடர்புடைய 05 வினாக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த வினாத்தாள் அதே பாடசாலையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது.
93 Views
Comments