இன்றைய தினம் வழங்க முடியாத அதிகரிக்கப்பட்ட சம்பளம் பிறிதொரு நாளில்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
11

இன்றைய தினம் வழங்க முடியாத அதிகரிக்கப்பட்ட சம்பளம் பிறிதொரு நாளில்

இன்றைய தினம் வழங்க முடியாத அதிகரிக்கப்பட்ட சம்பளம் பிறிதொரு நாளில்

அரச ஊழியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை இன்று(10) வழங்க முடியாத நிறுவனங்களுக்கு சம்பளத்தின் நிலுவைப்பணத்தை வழங்குவதற்காக பிறிதொரு திகதியை அறிவித்து சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளது.

 

பொதுநிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆலோக பண்டாரவினால் இந்த சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டது.

 

அரச ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட சம்பளம் இன்று வழங்கப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்தின் அடிப்படையில் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை இன்று வழங்க இயலாத நிறுவனங்கள் அரச உத்தியோகத்தர்களுக்கு தற்போதுள்ள சம்பளத்தை செலுத்த வேண்டும்.

 

புதிய சம்பள திருத்தத்திற்கமைய நிலுவைத் தொகையை எதிர்வரும் 25 ஆம் திகதி செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதேவேளை, 2020ஆம் ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கு அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியம் எதிர்வரும் ஜூலை முதல் வழங்கப்படும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

2020 மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஓய்வு பெற்றவர்களுக்கு அடுத்த வருடத்தில் ஓய்வூதியம் அதிகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

views

16 Views

Comments

arrow-up