பதுளை வாள்வெட்டு தாக்குதலில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில்

பதுளை மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் காயமடைந்த இருவரும் பதுளை மாகாண பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இருவரும் சகோதரர்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
பதுளை நகரில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த தமது மூத்த சகோதரரை இளைய சகோதரர் வாளால் வெட்டியுள்ளார்.
காயமடைந்த மூத்த சகோதரர் இளைய சகோதரரிடம் இருந்த வாளை பறித்து இளைய சகோதரரை கீழே தள்ளி தாக்கியுள்ளார்.
53 வயதான மூத்த சகோதரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பதுளை மாகாண பொது வைத்தியசாலையில் பொலிஸ் காவலில் சிகிச்சை பெற்று வருவதுடன் காயமடைந்த 48 வயதான இளைய சகோதரரும் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
சம்பவம் தொடர்பாக பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
5 Views
Comments