சர்வதேச வெசாக் விழாவில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAY
07

சர்வதேச வெசாக் விழாவில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி

சர்வதேச வெசாக் விழாவில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி

வியட்நாம் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஹோ ச்சி மிங் நகரில் நடைபெறும் சர்வதேச வெசாக் கொண்டாட்ட விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார்.

 

இதில் ஜனாதிபதி சிறப்புரை ஆற்றவுள்ளார்.

 

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கடந்த வௌ்ளிக்கிழமை வியட்நாம் நோக்கி பயணமானார்.

 

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவோங்க் ஆகியோருக்கு இடையில் நேற்று(05) சந்திப்பு இடம்பெற்றதுடன் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.

views

21 Views

Comments

arrow-up