சீனாவின் திபெத் எல்லையில் ஏற்பட்ட நிலஅதிர்வில் சிக்கி 53 பேர் பலி

சீனாவின் திபெத் எல்லையில் இன்று காலை(07) ஏற்பட்ட நிலஅதிர்வில் சிக்கி 53 பேர் உயிரிழந்தனர்.
60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக சீன அரச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.
திபெத்தில் உள்ள புனித நகரமான ஷிகாட்சேயில் அந்நாட்டு நேரப்படி இன்று காலை ஒன்பது மணியளவில் 7.1 மெக்னிடியூட் அளவில் நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.
புவிமேற்பரப்புக்கு 10 கிலோமீற்றர் ஆழத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியில் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து 05 சிறியளவிலான நிலஅதிர்வுகளும் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நிலஅதிர்வு ஏற்பட்டுள்ள குறித்த பகுதி, எவரெஸ்ட் சிகரத்தின் அடித்தளத்தில் அமைந்துள்ள நிலையில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நிலஅதிர்வினால் 1000 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
இதனிடையே, குறித்த பகுதிகளுக்கான நீர் மற்றும் மின்சார இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, நேபாள தலைநகர் காத்மாண்டுவிலும் இந்தியாவின் பீஹார் மற்றும் அசாம் மாநிலங்களிலும் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
87 Views
Comments