உணவு ஆணையாளர் திணைக்களம் மூலம் சீனி விநியோகம் ஆரம்பமாகிறது
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் கீழ் உணவுத்துறை ஆணையாளர் திணைக்களம் மூலம் தனியார் துறை மொத்த விற்பனையாளர்களுக்கு சீனி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விலையில் சீனி விற்பனை செய்ய உள்ளூர் மொத்த விற்பனையாளர்களுக்கு வழங்கப்படும் என்று வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.
எந்த களஞ்சியசாலையிலும் வெள்ளை சீனி ஒரு கிலோ ரூ.117 க்கும், சிவப்பு சீனி ஒரு கிலோ ரூ.120 க்கும் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த செயல்முறை பற்றிய கூடுதல் தகவல்களை 011 3681797 இலிருந்து பெறலாம்.
117 Views
Comments