பின்னவல யானைகள் சரணாலயத்தில் இரட்டை யானைகளின் பிறப்பு... (புகைப்படங்கள் உள்ளே)
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
AUG
31

பின்னவல யானைகள் சரணாலயத்தில் இரட்டை யானைகளின் பிறப்பு... (புகைப்படங்கள் உள்ளே)

பின்னவல  யானைகள் சரணாலயத்தில் இரட்டை யானைகளின் பிறப்பு... (புகைப்படங்கள் உள்ளே)

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பின்னவல  யானைகள் சரணாலயத்தில் இரட்டை யானை பிறந்துள்ளது.

 

சுரங்கி கெனர எனும் யானை இரண்டு ஆண் யானைகளைப் ஈன்றெடுத்துள்ளது.

 

முதல் பிறப்பு அதிகாலை 4 மணியளவிலும் இரண்டாவது பிறப்பு மதியம் 12 மணியளவிலும் நடந்ததாக கூறப்படுகிறது.

 

இது இலங்கை வரலாற்றில் முதல் அரை வளர்ப்பு இரட்டை யானை பிறப்பாக கருதப்படுகிறது.

 

இந்த 24 வயதான கெனர இதற்கு முன்பும் குட்டிகளை ஈன்றெடுத்துள்ளதாக பின்னவல  யானைகள் சரணாலயத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

 

கெனர மற்றும் இரண்டு யானைக் குட்டிகள் நலமாக இருப்பதாக செய்தி தொடர்பாளர் கூறினார்.

 

முன்னதாக, காடுகளில் ஆசிய யானையின் முதல் இரட்டை பிறப்பு மின்னெரியா தேசிய பூங்காவில் இருந்து பதிவாகியிருந்தது, ஆனால் ஒரு குட்டி இறந்துவிட்டதாக சந்தேகிக்கப்படுவதாக வனவிலங்கு துறையின் முன்னாள் தலைமை பணிப்பாளர் வைத்தியர் சுமித் பிலபிட்டிய கூறினார்.

 

அதுபற்றி 2020 ஜூலை 6ம் திகதி முதன்முதலில் அறிவிக்கப்பட்டது.

 

Twin ele1

 

Twin ele2

 

Twin ele3

 

 

 

 

 

 

 

 

 

source:hirunews

views

230 Views

Comments

arrow-up