பஸ் ஆசன முன்பதிவு இடைநிறுத்தம்

த்திரை புத்தாண்டு காலப்பகுதியில் பயணிகளுக்காக ஆசனங்களை முன்பதிவு செய்யும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 21ஆம் திகதி வரை முன்பதிவு நடவடிக்கை இடைநிறுத்தப்படவுள்ளது.
பஸ் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
இதனைத்தவிர பயணிகள் சேவை அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மார்க்கத்தில் பஸ்கள் தொடர்ச்சியாக பயணிக்க வேண்டியதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சாரதியொருவரின் கடமை நேரம் 14 மணித்தியாலங்களுக்கு மேற்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மற்றுமொரு சாரதியை பணிக்கமர்த்த வேண்டும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
பயணிகள் போக்குவரத்து பஸ்களை விசேட சுற்றுலாப்பயணங்களுக்கு ஈடுபடுத்துவதும் புத்தாண்டு காலப்பகுதியில் தடை செய்யப்பட்டுள்ளது.
15 Views
Comments