பிரபல பாலிவுட் நடிகையிடம் இந்திய போதைப்பொருள் எதிர்ப்பு பணியகம் விசாரணை

பிரபல பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவிடம் இந்திய போதைப்பொருள் தடுப்பு பணியகம் விசாரணை நடத்தியுள்ளது.
ஊடக அறிக்கைகளின்படி, போதைப்பொருள் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு விசாரணை நடந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
தொடர்ந்து இரண்டாவது நாளாக விசாரணைக்கு அவரை அழைப்பது பற்றி அதிகாரிகள் இதுவரை எதுவும் கூறவில்லை என்று கூறப்படுகிறது.
எனினும், இந்திய போதைப்பொருள் பணியகம் அவரிடம் விசாரணை நடத்தியதற்கும், ஆர்யன் கான் கைது செய்யப்பட்டதற்கும் தொடர்பு உள்ளதா என்று கூறவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அனன்யா பாண்டேவும் விசாரணை குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
720 Views
Comments