யோகானி பாடிய பாடல் படத்திலிருந்து நீக்கம்...

சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவன அருள் அவர்கள் தனது சொந்த செலவில் ஒரு படத்தை நடித்து தயாரித்தும் வருகின்றார். இந்தப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். இப்பாடல்களில் ஹாரிஸ் ஜெயராஜ் யோகானியை அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும் அப்பாடலை பதிவு செய்து வெளியிட்டுமுள்ளனர். குறித்த பாடல் மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றுள்ளது. அமிதாப் பச்சன் அவர்கள் இந்த பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டும் இருந்தார். மேலும் இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் ஹாரிஸ் ஜெயராஜ் தனது ட்விட்டர் பதிவில் யோகானிக்கும், மதனுக்கும் நன்றி தெரிவித்து 3 பேரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்திருந்தார்.
எனினும் “அப்பாவி மக்களை கொன்ற தலைவரின் மகள் பாடிய பாட்டு படத்திலிருந்து நீக்க வேண்டும்” என்ற கோரிக்கையை நாம் தமிழர் கட்சியினர் தமிழ் தேசியவாதிகள் முன்வைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தும் வந்தனர். அப்பாடலை நீக்க வலியுறுத்தி சீமான் அவர்கள் சரவணன் அவர்களுக்கு நேரடியாக அழைத்து கூறியுள்ளார். அவரும்அப்பாடலை பெருந்தன்மையாக படத்திலிருந்து நீக்கியுள்ளார்.
மேலும் சீமான் இந்த பிரச்சனையை அமைதியாக முடித்தது பெரிய பாராட்டுக்குரிய ஒன்றாக மக்களால் பார்க்கப்படுகிறது
754 Views
Comments