22 வயது காதலியை ஒரு மாதமாக கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த 16 வயது மாணவன்!

ஏறக்குறைய ஒரு மாத காலமாக தனது இருபத்தி இரண்டு வயது காதலியை வீட்டில் கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த பதினாறு வயது மாணவன் பற்றிய தகவல் உஹன பிரதேசத்திலிருந்து பதிவாகியுள்ளது.
குறித்த மாணவனின் பெற்றோர்கள் கடையொன்றை நடத்தி வருவதாகவும், அவர்கள் அதிகாலையில் வீட்டை விட்டு வெளியேறி இரவு தாமதமாக வருவதாகவும் தெரியவந்துள்ளது.
அதன் காரணமாக பகலில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், இரவு நேரத்தில் மாணவன் தனது காதலியை கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்துள்ளார்.
குறித்த யுவதியை அவரது அறைக்கு அழைத்து வந்து அவருக்கு தேவையான உணவுகளை வழங்கியதாகவும், ஒரு சந்தர்ப்பத்தில் தாய் திடீரென பகலில் வீட்டிற்கு வந்தபோது, யுவதியைக் கண்டுள்ளதாகவும், ஆனால் இருவரும் தந்தையிடம் கூற வேண்டாம் என தாயிடம் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
எனினும் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இருவரையும் பொலிஸ் காவலில் எடுத்துள்ளதாகவும் தந்தைக்கு அப்போது சம்பவம் தொடர்பில் தெரியாது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
453 Views
Comments