யோஹானியின் முதல் நேரடி நிகழ்ச்சி இந்தியாவில்… (VIDEO)
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
OCT
01

யோஹானியின் முதல் நேரடி நிகழ்ச்சி இந்தியாவில்… (VIDEO)

யோஹானியின் முதல் நேரடி நிகழ்ச்சி இந்தியாவில்… (VIDEO)

‘மெணிக்கே மகே ஹிதே’ பாடல் மூலம் உலகளாவிய ரீதியில் ரசிகர் இதயங்களை வென்ற இலங்கை பாடகி யோஹானி திலோக டி சில்வா, நேற்று மாலை இந்தியாவின் புது தில்லியில் உள்ள குருகிராமில் தனது முதல் இந்திய இசை நிகழ்ச்சியை நிகழ்த்தினார்.

 

ஸ்டுடியோ எக்சோ (Studio XO) இல் இடம்பெற்ற இந்த இசை நிகழ்ச்சிக்கு சூப்பர் மூன் நவ் ட்ரெண்டிங் (supermoon now trending) என்று பெயரிடப்பட்டிருந்தது.

 

திய ஊடகங்கள் மூலம் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வளர்ந்து வரும் பாடகர்கள் மற்றும் நகைச்சுவை நட்சத்திரங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த புதிய தளத்தின் முதல் சோதனை யோகானியின் இசை நிகழ்ச்சியாகும்.

 

நேரடி இசை நிகழ்ச்சிகளை உருவாக்குவதன் மூலம் வளர்ந்து வரும் கலைஞர்களை நேரடியாக அவர்களின் ரசிகர்களுக்கு நெருக்கமாக கொண்டு வருவதே இந்த நிகழ்ச்சித் தொடரின் நோக்கமாகும்.

 

யோஹானி தனது திறமைகளை வெளிப்படுத்தும் தொடர்ச்சியான இரண்டாவது இசை நிகழ்ச்சி அக்டோபர் 3 ஆம் திகதி ஹைதராபாத்தின் கச்சிபவுலியில் உள்ள ஹாட் கப் கஃபே (Heart Cup Cafe) இல் நடைபெறவுள்ளது.

 

நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பெரும் திரளான மக்கள் இணைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

 

views

760 Views

Comments

arrow-up