திருமணத்தின் போது முன்னாள் காதலிகளிடமிருந்து மணமகனுக்கு எதிர்ப்பு!

திருமணத்தின் போது நடந்த வித்தியாசமான நிகழ்வு ஒன்றின் மீது தற்போது உலகின் கவனம் குவிந்துள்ளது.
குறித்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமீபத்தில் நடந்த திருமணத்தின் போது மாப்பிள்ளையின் முன்னாள் காதலிகள் பலர் ஏற்பாடு செய்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
இளம் பெண்கள் குழுவொன்று கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த கற்பனைக்கு எட்டாத அனுபவத்தை சென் என்பவர் எதிர்கொண்டார்.
எனினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் காதலிகளிடம் குறித்த மணமகன் மன்னிப்பு கேட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த காலங்களில் தான் நல்ல காதலன் இல்லை என்று கூறியிருந்தாலும், தனது பழைய காதலிகளை பிரிந்ததற்கு குறிப்பிட்ட காரணத்தை கூறியுள்ளார்.
ஒவ்வொருவரும் தங்கள் காதலிக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
443 Views
Comments