ஆறு நாடுகளில் சிறுவர்களுக்கான இருமல் மருந்துக்கு அதிரடி தடை!
විදේශගත ඔබට
Latest_News
calendar
APR
15

ஆறு நாடுகளில் சிறுவர்களுக்கான இருமல் மருந்துக்கு அதிரடி தடை!

ஆறு நாடுகளில் சிறுவர்களுக்கான இருமல் மருந்துக்கு அதிரடி தடை!

குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த இருமல் மருந்துக்கு தென்னாபிரிக்கா உள்ளிட்ட 6 ஆபிரிக்க நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

தென்னாப்பிரிக்கா, கென்யா, நைஜீரியா, ருவாண்டா, தான்சானியா உள்ளிட்ட நாடுகளில் பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சனின் இருமல் மருந்து விற்கப்பட்டு வந்தது.

 

குறிப்பாக 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைந்து வந்தனர். இந்த நிலையில் குறித்த மருந்தை குடித்த குழந்தைகள் பலருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டது.

 

இதனையடுத்து, அந்த மருந்தை அந்தந்த நாடுகளின் சுகாதாரத்துறை அமைச்சகங்கள் சோதித்தன. அதில் இருமல் மருந்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவிலான வேதிப்பொருட்கள் இருந்துள்ளது.

 

இதன் காரணமாக குழந்தைகள் அதை குடிக்கும் போது உடலில் நச்சுத்தன்மை அதிகமாகி உடல் நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது.

 

இதனை தொடர்ந்து, தென் ஆப்பிரிக்கா, கென்யா, தான்சானியா உள்ளிட்ட 6 ஆப்பிரிக்க நாடுகளில் இந்த மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவனம் விற்ற அனைத்து மருந்து போத்தல்களையும் திரும்ப பெற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

views

314 Views

Comments

arrow-up