பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட சண்முகம் குகதாசன்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUL
09

பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட சண்முகம் குகதாசன்

பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட சண்முகம் குகதாசன்

இலங்கை தமிழரசுக் கட்சியின் கதிரவேலு சண்முகம் குகதாசன் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். 

 

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் மறைவை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே கதிரவேலு சண்முகம் குகதாசன்  நியமிக்கப்பட்டுள்ளார். 

 

இன்றைய சபை அமர்வின் ஆரம்பத்தில் அவர் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தார்.

 

திருகோணமலை திரியாய் பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட சண்முகம் குகதாசன் அரச அறிவியல் துறையில் முதுநிலை பட்டதாரியாவார். 

 

நீண்ட காலமாக கனடாவில் வசித்த வந்த சண்முகம் குகதாசன் 2020 ஆம் ஆண்டு முதல் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட கிளைத்தலைவராக இரண்டு சந்தர்ப்பங்களில் கடமையாற்றியுள்ளார். 

 

2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சண்முகம் குகதாசன் 16,770 விருப்பு வாக்குகளைப் பெற்றார். 

 

இதன்மூலம் அந்த் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் இராஜதவரோதயம் சம்பந்தனுக்கு அடுத்தபடியாக அதிக  விருப்பு வாக்குகளை பெற்றவராக சண்முகம் குகதாசன் பதிவானார்.

views

182 Views

Comments

arrow-up