பணிப்பகிஷ்கரிப்பை பிற்போட்டது அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை முன்னெடுக்கவிருந்த பணிப்பகிஷ்கரிப்பை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக இன்று பிற்பகலில் அறிவித்தது. கொழும்பில் இன்று(04) பிற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் பிரபாத் சுகததாஸ இதனை உறுதிப்படுத்தினார்.
தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் சாதகமான தலையீடுகளை மேற்கொண்டுள்ளதால் பணிப் பகிஷ்கரிப்பை பிற்போடுவதற்கு தீர்மானித்ததாகவும் அவர் கூறினார்.
மேலதிக கடமைக்கான கொடுப்பனவு, விடுமுறை கொடுப்பனவு என்பன குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை பணிப் பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஏற்கனவே அறிவித்தமை நினைவுகூரத்தக்கது.
34 Views
Comments