வியட்நாம் ஜனாதிபதியை சந்திக்கும் ஜனாதிபதி அனுர

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் வியட்நாம் ஜனாதிபதி லுன் சூங்க் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளது.
3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேற்று முன்தினம்(03) பிற்பகல் வியட்நாம் நோக்கி பயணமானார்.
இந்த நிலையில் அந்நாட்டு பிரதமருடனும் ஜனாதிபதி கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.
தென் கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பௌத்த விகாரைகளில் ஒன்றான வியட்நாமிலுள்ள பாய் தின் விகாரையில் ஜனாதிபதி நேற்று(04) வழிபாடுகளில் ஈடுபட்டார்.
வியட்நாமில் உள்ள ஹோ ச்சி மின் நகரில் நடைபெறும் சர்வதேச வெசாக் தின கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கலந்து கொள்ளவுள்ளார்.
இதன்போது ஜனாதிபதி விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
25 Views
Comments