அதானி காற்றாலை மின்னுற்பத்தி திட்டம் தொடர்பான வலுசக்தி அமைச்சின் அறிவித்தல்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
DEC
12

அதானி காற்றாலை மின்னுற்பத்தி திட்டம் தொடர்பான வலுசக்தி அமைச்சின் அறிவித்தல்

அதானி காற்றாலை மின்னுற்பத்தி திட்டம் தொடர்பான வலுசக்தி அமைச்சின் அறிவித்தல்

அதானி நிறுவனம் இலங்கையில் நிர்மாணிக்கவுள்ள காற்றாலை மின்னுற்பத்தி திட்டம் தொடர்பில் அமைச்சரவையில் விடயங்களை முன்வைக்கவுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

இந்த திட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் அடிப்படையிலே அமைச்சரவையில் விடயங்கள் முன்வைக்கப்படவுள்ளன.

 

இந்த குழு பல்வேறு துறைகள் ஊடாக ஆய்வுகளை மேற்கொண்டு காற்றாலை மின்னுற்பத்தி திட்டம் தொடர்பான பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

 

மன்னார் மற்றும் பூநகரி பகுதிகளில் நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்தின் மூலம் 484 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

 

இதற்காக அதானி நிறுவனம் ஏற்கனவே ஓரளவு முதலீடுகளை மேற்கொண்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 

எவ்வாறாயினும், குறித்த குழுவின் அறிக்கை மற்றும் பரிந்துரைகளை ஆராய்ந்ததன் பின்னர் அமைச்சரவை இந்த விடயம் தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும் என வலுசக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

views

87 Views

Comments

arrow-up